கொரொனாவால் வேலையிழந்தவர்கள் பரிசில் பேரணி!!
கொரொனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாக, பல நிறுவனங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பல்லாயிரக் கணக்கானவர்களை வேலையிலிருந்து நிறுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளது.
இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைய உள்ளனர்.
இதனை எதிர்த்து, பல தொழிற்சங்கங்களுடன், முக்கியமாக CGT உடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் இன்று பரிசில் பேரணி நடாத்துகின்றனர்.
முதலாளிகளின் நலனிற்காக 1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரான்சின் நிறுவனங்களிற்கான அமைப்பான Medef (Mouvement des entreprises de France) இன் தலைமையகம் நோக்கி இந்தப் பேரணி செல்கின்றது.
No comments