கனடாவில் மர்மமான முறையில் 7 வயது சிறுமி பலி!
கனடாவில் Laval நகரில் கடந்த ஞாயிறுக்கிழமை மர்மமான முறையில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
குறித்த வீட்டில் பேச்சு மூச்சில்லாமல் 7 வயது சிறுமி கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு வந்த பொலிசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
ஆனால் அச்சிறுமி ஏற்கனவே வீட்டிலேயே இறந்தது தெரியவந்தது.
சிறுமியின் உடலில் காயங்கள் மற்றும் கடுமையான தீக்காயங்கள் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் பொலிசாருடன் சேர்ந்து இளைஞர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
சிறுமி இருந்த வீட்டில் அவரின் பெற்றோர் உட்பட 6 பேர் இருந்த நிலையில் அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதால் சிறுமி மரணத்தின் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments