உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வது - மனித உரிமை மீறல்! ஐ.நா !!
இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வது மனித உரிமையை மீறும் செயலாக கருதப்படுகின்றது.
இதனை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்படுத்தக்கூடாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட நிபுணர் குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்19 தொற்றில் மரணிக்கும் நபர்களின் சடலங்களை கட்டாய தகனம் செய்வதன் மூலம் இலங்கையில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படுவதுடன் வன்முறைகள் ஏற்படுவதற்கு இடமிருக்கின்றது.
கொவிட் தொற்றுக்குள்ளாக மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதனூடாக வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கையிலோ வேறு நாடுகளிலோ மருத்துவ ரீதியில் அல்லது விஞ்ஞான ரீதியிலான எந்த ஆதாரமும் இலலை.
மேலும் இலங்கையில் கொவிட் மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்க அளவானவர்கள் முஸ்லிகளாகும்.
அவர்களின் பூதவுடல்கள் உள்நாட்டு சுகாதார வழிகாட்டலுக்கமைய தகனம் செய்யப்பட்டிருக்கின்றன.
தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானியின் நிலைப்பாட்டுக்கமைய கொவிட் சடலங்களை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பது, சடலம் அடக்கம் செய்வதால் நிலத்தடி நீரினுடாக தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதனாலாகும்.
எனவே பலவந்தமாக கொவிட் சடலங்களை தகனம் செய்வதை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும்.
அத்துடன் முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட தகனங்களுக்காக எந்தமுறையிலாவது நிவாரண முறைமையொன்றை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
No comments