சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்க பனிக்குடில் உணவகம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையும் ஒன்று. இந்தியாவில் இப்போது கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து, ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்டவை அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக, விருந்தோம்பல் துறையினர் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், காஷ்மீரின் குல்மார்க் நகரில் உள்ள கோலஹோய் ஸ்கை ரிசார்ட், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பனிக் குடில் உணவகத்தை திறந்துள்ளது.
15 அடி உயரம், 26 அடி சுற்றளவுடன் அமைந்துள்ள இந்த உணவகத்தின் கூரை, மேசை உள்ளிட்டவை பனிக்கட்டிகளால் வடிவமைக்கப் பட்டுள்ளன. ஆர்க்டிக் பகுதியில் உள்ள குடியிருப்புகளை அடிப்படையாகக் கொண்டு, 16 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் இந்தக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனுள் சூடான, சுவையான, புதுமையான உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இதை ஏராளமானோர் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர். இதைப் பார்த்த இணையவாசிகள், அங்கு நிலவும் வெப்பநிலை எவ்வளவு, என்னென்ன உணவு வகைகள் கிடைக்கும் என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
No comments