தனிமைப்படுத்தல் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு
தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேலும் சில பிரதேசங்கள் நாளை (01) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் 100 ஆம் இலக்க தோட்டம், துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் புனித அன்ட்ரூஸ் பிளேஸ், மேல் புனித அன்ட்ரூஸ் பிளேஸ், அன்ட்ரூஸ் பிளேஸ் மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.
No comments