🔴 சற்று முன்னர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்ட பிரதமர்..!!
பிரதமர் Jean Castex சற்று முன்னர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை 23 ஆம் திகதியுடன் இதுவரை ஒரு மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
<<எங்களது அனைத்து மருத்துவர்கள், உதவியாளர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், ஆலோசகர்கள் அனைவருக்கும் நன்றிகள்!>> என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை Strasbourg நகருக்கு பயணித்த பிரதமர், அங்கு வைத்தே இதனை தெரிவித்தார்.
ஜனவரி மாத இறுதிக்குள் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பாகவே இந்த எண்ணிக்கையை அரசு எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments