அபாய கட்டத்தில் லண்டன் மருத்துவமனைகள்…. உச்சத்தை தொட்டு வரும் கொரோனா
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக தலைநகர் லண்டன் உட்பட முக்கிய நகரங்களில் நான்கு அடுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் லண்டனில் பெரிய மருத்துவமனைகள் படுக்கை பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து ஆறாவது நாளாக , கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியுள்ளது.
ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் 54,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 454 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இதுவரை வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 75,024 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரான்சை பின்னுக்கு தள்ளி, பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது.
No comments