Header Ads

13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளம்பெண்!



 ஜிம்பாப்வே நாட்டில் 13 வயது சிறுமி மவுண்ட் டார்வினில் இருக்கும் தனது அத்தை 20 வயது Luckness Nyandangu வீட்டிற்கு விடுமுறைக்காக சென்றுள்ளார்.

மறுநாள் புத்தாண்டு என்ற நிலையில், டிசம்பர் 31-ஆம் திகதி சிறுமி Nyandangu வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.

நள்ளிரவில் திடீரென அந்த வீட்டுக்குள் ஒரு ஆண் நுழைந்து சிறுமியின் வாயைக் கட்டிய அந்த நபர், துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

பின்பு, கட்டை அவிழ்த்து நடந்ததை பற்றி வெளியே வாய் திறந்தாள் கொன்றுவிடுவேன் என மிரட்டிவிட்டு சென்றுள்ளார்.

அதன் பின் அவளது அத்தையும் அங்கு வந்து நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவதாக மீண்டும் மிரட்டி வைத்துள்ளார்.

நியாண்டங்கு வீட்டிலிருந்த சிறுமி, 5 நாட்களுக்கு பின் பக்கத்து கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று, தனது அம்மாவிடம் அனைத்தையும் கூறியுள்ளார்.

விடயம் அறிந்து சிறுமியின் தாய், உடனே பாவற்துறையில் புகார் அளித்துள்ளார்.

உடனடியாக Nyandanguவை கைது செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில்

சிறுமியை சீரழிக்க வந்தவன் நியாண்டங்குவின் நண்பன் Takudzwa Bamava என்றும், அவள் தான் சிறுமியை கெடுக்க திட்டம் தீட்டி இந்த காரியத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

இப்பொது Nyandangu மற்றும் Bamava இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.