இலங்கையில் 3 இடங்களில் நடைபெற்ற திருமண நிகழ்வால் ஏற்பட்டுள்ள பரபரப்பு
இலங்கையில் பாதுக்க வட்டரெக்க பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வுகளால் புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுமண தம்பதிகள் 3 இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்விலும் கலந்து கொண்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரவு தெரிவித்துள்ளது.
கடுவெல, பாதுக்க மற்றும் வட்டரெக்க ஆகிய பிரதேசங்களில் இந்த திருமண நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த திருமண நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி பெறவில்லை என தகவல் தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஹோமாகம, பிட்டிபன பிரதேசத்தில் நிகழ்வு மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்வில் மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இவ்வாறான திருமணங்களினால் கொரோனா தொற்று அதிவிரைவாக இலைங்கையில் பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments