Header Ads

சுதந்திர நாளில் வடக்கு – கிழக்கில் கதவடைப்பு



 ( நமது நிருபர் கவிசுகி )

சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை, தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு - கிழக்கு தழுவிய பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுப்பதாக, வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், பெப்ரவரி  4ஆம் திகதி, தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகுமென்றார்.

இனியாவது இலங்கையை விசாரிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா உறுப்புநாடுகள் ஆகியன  பாதுகாப்பு சபைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பெப்ரவரி 4ஆம் திகதி, கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, வடக்கு - கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சி பேரணியை நடத்துவதற்கு, தமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாகவும், அவர் கூறினார்.

இதற்கமைய, வடக்கு மாகாணத்துக்கான எழுச்சி பேரணி, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில், 4ஆம் திகதி காலை 8-30 மணிக்கு ஆரம்பமாகுமெனத் தெரிவித்த அவர், கிழக்கு மாகாணத்துக்கான பேரணி, சம நேரத்தில், மட்டகளப்பு - கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமாகி, காந்தி பூங்காவை சென்றடையுமெனவும் கூறினார்.


No comments

Powered by Blogger.