Header Ads

யாழ்ப்பாணம் நகரில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிராக போராட்டம்



 ( நமது நிருபர் கவிசுகி )

யாழ்ப்பாணம் சிவில் சமூகத்தினரின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு எதிராக, யாழ்ப்பாணம் நகரில், (25) காலை, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

எதிர்வரும் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்க் கட்சிகள் பக்கசார்பாகச் செயற்பட்டு வருவதாகச் சாடிய யாழ்ப்பாணம் சிவில் சமூகத்தினர், குறிப்பாக, ஜெனிவாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல், கொலை விடயங்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயமாக சுட்டிக்காட்டப்பட வேண்டும். எனினும், அந்த விடயம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் எந்தவித கரிசனையும் செலுத்துவது இல்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.

எனவே, இந்த நாட்டில் தமிழ்க் கட்சிகள் ஜனநாயக ரீதியாக செயற்படவில்லையெனவும் தமிழ் மக்களை தமிழ்க் கட்சிகள் ஏமாற்றி வருவதாகவும், அவர்கள் குற்றஞ்சாட்டின

No comments

Powered by Blogger.