Header Ads

🔴 சற்று முன் : பாடசாலை மூடப்பட்டது! - மாணவருக்கு பிரித்தானிய வைரஸ் கண்டுபிடிப்பு!!



கொரோனா வைரசின் புதிய பிரிவான பிரித்தானிய வைரஸ் தற்போது இல் து பிரான்சுக்குள் உள்ள பாடசாலை ஒன்றில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

 
Courdimanche, Val-d'Oise நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த புதிய கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது. 600 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களில் 13 பேருக்கு தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அவர்களில் ஒருவருக்கு பிரித்தானியாவின் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று சங்கிலியை உடனடியாக உடைக்க தீர்மானித்த  l'Agence régionale de Santé, பாடசாலையை உடனடியாக மூடியுள்ளது. மாணவர்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.