93 ஆம் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை..!!
Seine-Saint-Denis (93) மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 95 கி.மீ வேகத்தில் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும் படியும் கோரப்பட்டுள்ளது.
No comments