Header Ads

🔴 விசேட செய்தி : பிரித்தானியாவின் புதிய வைரஸ் - தொற்று வலையமாக கண்டுபிடிப்பு..!!

 


பிரித்தானியாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் புதிய வைரஸ் தற்போது பிரான்சில் ‘தொற்று வலையமாக’ கண்டறியப்பட்டுள்ளது. 

 
VOC 202012/01 என அழைக்கப்படும் கொரோனா வைரசின் புதிய பிரிவான இவ்வகை வைரஸ் பிரான்சில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி முதன்முறையாக ஒருவருக்கு கண்டறியப்பட்டது. அதன் பின்னர், அதே வைரஸ் இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. இந்நிலையில், தற்போது பிரான்சில் இவ்வகை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதுவரை 19 பேருக்கு இவ்வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு ‘தொற்று வலையமாக’ உள்ளது எனவும், மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை கொரோனா வைரசின் தென்னாப்பிரிக்க வகையான 501.V2' எனும் வைரஸ் பிரான்சில் மூவருக்கு தொற்றியுள்ளமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.