Header Ads

கொரோனா தொற்றாளர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆய்வு

 


சுவிட்சர்லாந்தில் Bern பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் Bern பல்கலைக்கழகம் இணைந்து நீண்ட கால கொரோனா குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஒன்பது சுவிஸ் மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 113 பேரை ஆய்வுசெய்தார்கள்.

அதில் 66 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள், 47 பேர் ஓரளவு குறைவாக பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

பல மாதங்களுக்குப் பிறகு அந்த குறைந்த பாதிப்புகொண்டவர்கள் முற்றிலும் குணமடைந்துவிட்ட நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் போராடிக்கொண்டிருந்தார்கள்.

இந்த நுரையீரல் பாதிப்பு எவ்வளவு காலத்துக்கு இருக்கும் என்பது தெரியவில்லை.

ஆகவே, கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சிலர் குணமடைந்த போதிலும் நீண்ட கால இடைவெளியிற்கு பிறகு மீண்டும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அவர்கள் குணமடைந்தபின்னரும் அவர்களை கவனித்துக்கொள்வதும், குறித்த தடுப்பூசி போடுவதும் அவசியமாகிறது என்பது இந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.