Header Ads

பிரித்தானியக் கெரரோனா வைரஸ் - பரிசின் புறநகரப் பகுதியில் பதற்றம் - நகரம் முழுவதிற்கும் சோதனை!!

 


பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் அதிவிரைவாக  தொற்றும் தன்மை உடையதும் ஆபத்தானதும் ஆகும். இந்த வைரசின் இரண்டு தொற்றுத் தொகுதிகளானது பபரிசை அண்டிய புறநகர மாவட்டமான, Hauts-de-Seine இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் முக்கியமாக Hauts-de-Seine இலுள்ள Bagneux நகரத்தின் மக்கள் அவைரையும் உடனடியாகக் கொரோனாத் தொற்றிற்கான சோதனை செய்யும்படி பிராந்திய சுகாதார நிறுவனமான ARS அறிவுறுத்தி உள்ளது.
 
 
இதனால் இன்றும், திங்கட்கிழமையும் செவ்வயாக்கிழமையும் அனைவரும் உடனடியாகக் தொரோனாத் தொற்றுப் பரிசோதனை செய்யும் வகையில், மாநகரசபை மற்றும் பிராந்திய சுகாதார நிறுவனம் ஆகியவை ஒழுங்குகளைச் செய்துள்ளன.
 
 
இந்தத் தகவல் Bagneux நகர மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
 
அரசாங்கம் ஊரடங்கு நேரத்தை சில பகுதிகளிற்கு மட்டும் அறிவித்துள்ள நிலையில் ஆபத்துக்கள் மிகவும் மோசமாக அதிகரித்தே வருகின்றன.

No comments

Powered by Blogger.