பேசுவதால் அதிவேகமாக பரவும் கொரோனா பிரித்தானிய ஆய்வில் வெளியான தகவல்
கொரோனா தொற்று இருமல், தும்மல் மூலமாக பரவும் என்பது ஆரம்ப காலத்தில் கண்டறியப்பட்டது.
ஆனால், இருமலைவிட வேறொரு விடயம் அதிகமாக கொரோனாவை பரப்ப கூடியது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகம் பேசிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு கொரோனா இருக்கும் பட்சத்தில், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.
30 விநாடிகள், மாஸ்க் அணியாமல், சரியான காற்றோட்டமில்லாத அறை ஒன்றில் ஒருவர் பேசிக்கொண்டிருப்பது, ஒருவர் முன் அரை விநாடி இருமுவதைவிட அதிக அபாயத்தை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இருமல் வேகமாக பெரிய எச்சில் துளிகளை உருவாக்கும் என்றால், பேசுவது அதிக அளவு சிறிய எச்சில் துளிகளை உருவாக்கும்.
அந்த துகள்கள் காற்றில் ஒரு மணி நேரம் வரை சுற்றிக்கொண்டிருக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி இணைந்து நடத்திய ஆய்வு தெரியவந்தது.
ஆகவே, மாஸ்க் அணிந்துகொள்வதால் பிரச்சினையை தடுத்து நம்மையும் மற்றவர்களையும் பாதுகாக்க முடியும் என ஆய்வுக்குழுவின் தலைவரான Dr Pedro de Oliveira தெரிவித்துள்ளார்.
No comments