🔴 பிரித்தானிய வைரஸ்! - பிரான்சில் மேலும் 21 பேருக்கு தொற்று..!!
பிரான்சில் பரவி வரும் பிரித்தானியாவின் புதிய வைரஸ் தற்போது மேலும் பலருக்கு தொற்றியுள்ளது.
கொரோனா வைரசை விட வீரியம் மிக்கதாக சொல்லப்பட்டும் இந்த வைரஸ், தற்போது மேலும் 21 பேருக்கு தொற்றியுள்ளது. முதன் முறையாக வைரஸ் கண்டறியப்பட்ட Bouches-du-Rhône நகரில் உள்ள குடும்பத்தினரிடம் இருந்தே இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும், தொற்று வலையம் விரிவடைந்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி முதன்முறையா இவ்வகை வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் இல் து பிரான்சுக்குள்ளும் ஒருவருக்கு தொற்று புதிய 'தொற்று வலையத்தை' உருவாக்கியிருந்தது. நிலமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டபோதும், புதிதாக 21 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments