Header Ads

இலங்கை மக்களிடம் பாதுகாப்பான முகக் கவசங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

 


கொரோனா தொற்றை தவிர்ப்பதற்கு மக்கள் அனைவரும் முககவசங்களை அணிகின்றனர்.

இந்நிலையில் துணி முகக் கவசத்துடன் சத்திர சிகிச்சை முகக் கவசத்தை ஒரே நேரத்தில் அணிவது மிகவும் பாதுகாப்பானதாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முகக் கவசம் தயாரிக்க பயன்படுத்தப்படும் துணி வகையின் தன்மையும், மக்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது.

உயர் திறன் கொண்ட முகக் கவசம் மூன்று அடுக்கில் ஸ்பொஞ்ச் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதி வழியாக காற்று மட்டுமே செல்கிறது. தூசி போன்றவை அந்த ஸ்பொஞ்ச் வழியாக உள்ளே செல்லாது.

N95 அல்லது FFP2 போன்ற உயர் திறன் கொண்ட முகக் கவசம் அணிவதால் தூசி அல்லது வேறு எதுவும் உள்ளே செல்ல விடாமல் 94 வீதம் பாதுகாக்கப்படுகின்றது.

ஏனைய சாதாரண முகக் கவசத்தில் 92 வீதமே பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

சாதாரண சத்திர சிகிச்சை முகக் கவசம் ஊடாக 60 – 70 வீதம் மாத்திரமே பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

ஆகவே இலங்கை மக்கள் பயன்படுத்தும் முகக்கவசம் தொடர்பில் விழிப்புடன் செய்ற்பட அரசு வலியுறுத்துகின்றது

No comments

Powered by Blogger.