Header Ads

சுவிட்சர்லாந்தில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல் புதிய ஆய்வு



 சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 8,000 பேர் இறந்துள்ளனர்.

அதனால் அதன் தாக்கம் சமூகத்தில் மொத்தமாக அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம் ஊரடங்கின் போது சுமார் 9 சதவீத சுவிஸ் மக்கள் தாங்கள் மனச்சோர்வால் அவதியுறுவதாக வெளிப்படுத்தியிருந்தனர்.

ஆனால் மே மாதம் இந்த எண்ணிக்கை 12 சதவீதமாகவும், நவம்பர் மாதம் அது 18 சதவீதமாகவும் அதிகரித்தது.

இந்நிலையில் 14 முதல் 24 வயதுடைய சுவிட்சர்லாந்து இளைஞர்களில் மனச்சோர்வு ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆனால் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களில் வெறும் 6 சதவீதத்தினரே, மனச்சோர்வில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் பெரும்பாலும் குடியிருப்பிலேயே இருக்க நேரிடுவால் பெற்றோர்கள் அதிகம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக நேரம் தூக்கத்தில் செலவிட விரும்புகின்றனர்.

மேலும் உற்சாகமின்றி காணப்படுவதாகவும், இதன் உச்சகட்டத்தில், இளையோர்களுக்கு தற்கொலை எண்ணம் கூட வரலாம் என உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

No comments

Powered by Blogger.