பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு புதிய சோதனை முறை அறிமுகம்
பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் புதிய சோதனை முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கடுமையான உடல்நலக் குறைவு ஏற்படுவதைத் தடுக்க இது உதவும்.
இந்த சிகிச்சை முறையானது இன்டர்ஃபெரான் பீட்டா-1ஏ என்ற புரதத்தை மூச்சு வழியாக கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்துதல் ஆகும்.
சுவாச மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சினேர்கென் பி.எல்.சி (எல்.எஸ்.இ: எஸ்.என்.ஜி), அதன் உலகளாவிய மூன்றாம் கட்ட சோதனையின் (எஸ்.ஜி .018) ஒரு பகுதியாக முதல் நோயாளிக்கு மருந்தளவு அளிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மனிதர்களைத் தீநுண்மி தாக்கினால் உடல் உற்பத்தி செய்யக் கூடிய அந்தப் புரதத்தை மூச்சு வழியாக செலுத்துவதன் மூலம், கொரோனா நோயாளிகள் உடல் நிலை மோசமடைவதைத் தடுக்க முடியும் என இந்த சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்க்கப்பகள் தெரிவித்துள்ளனர்.
அலெக்ஸாண்ட்ரா கான்ஸ்டான்டின் எனும் 34 வயது பெண்மணி, இந்த புதிய சோதனையின் சிகிச்சை பெற்ற முதல் நபராவார்.
இந்த சோதனை பயன்படுத்துவதன மூலமே எவ்வாறான சாதகமான விளைவை கொடுக்கின்றது என்பது தெரியவரும்
No comments