Header Ads

சீனாவிற்கு சென்ற உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் குழு

 


உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் குழு இன்று சீனாவின் வுஹான் நகரத்திற்கு கொரோனா தொற்றுநோயின் தோற்றம் குறித்து அரசியல் ரீதியாக முக்கியமான ஆய்வை நடத்த அங்கு சென்றுள்ளது.

உலக சுகாதார அமைப்பால் வுஹானுக்கு அனுப்பப்பட்ட 10 பேர் கொண்ட குழு ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்தால் பல மாதங்கள் இராஜதந்திர ரீதியிலான மோதலுக்குப் பின்னர் அங்கீகரிக்கப்பட்டது.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த நோய் பரவ அனுமதித்ததாக பரவலான புகார்கள் உலக அளவில் எழுந்துள்ளது.

இந்நிலையில், வைரஸ் இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவுகள் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சீன அரசு ஊடகமான உலக சுகாதார அமைப்பால் நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவின் வருகையை அறிவித்தது.

அந்த உறுப்பினர்களில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், ரஷ்யா, நெதர்லாந்து, கத்தார் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வைரஸ் மற்றும் பிற நிபுணர்கள் உள்ளனர்

No comments

Powered by Blogger.