மரபணு ரீதியில் உருமாறும் கொரோனா…. அமெரிக்காவின் மருத்துவத் துறை
வைரசின் இயல்பே உருமாறுவது தான் அனைவரும் அறிந்ததாகும்.
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்துவது புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருகிறது.
தொடர்ந்து உருமாறிக் கொண்டிருக்கும் கொரோனா வைரசை திறம்பட எதிர்கொள்ள அதிக முதலீடுகள் தேவை என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவராக நியமிக்கப்பட இருக்கும் மருத்துவா் விவேக் மூா்த்தி கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தொடர்ந்து உருமாறும் கொரோனா கிருமியை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
பாதிப்பு ஏற்படுகின்றபோதுதான் அதன் வகைகளை நாம் அடையாளம் காண முடியும் என்பதால், சிறந்த மரபணு ரீதியிலான கண்காணிப்பை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
மக்கள் முகக் கவசம் அணிவதை தொடா்ந்து கடைப்படிப்பதோடு, ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பாதிப்பை திறம்பட எதிர்கொள்ள சிகிச்சை நடைமுறைகளை மேம்படுத்தவும், தொற்று பரவல் தொடா்பு சங்கிலியைக் கண்டறியவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிக முதலீடுகளைச் செய்வது மிக அவசியமாகும்.
No comments