Header Ads

கொரோனாவிலிருந்து குணமடைந்தோரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வு முடிவுகள்



 கொரோனா தொற்றால் ஏற்பட்ட நீண்ட கால விளைவுகளால், கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் பலருக்கு இதய பிரச்சினைகளும், நீரிழிவு மற்றும் நீண்ட கால கல்லீரல் பிரச்சினைகளும், சிறுநீரக பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து குணமடைவோரில் எட்டு பேரில் ஒருவர் 140 நாட்களுக்குள் உயிரிழக்கிறார் எனும் ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பும் கொரோனா நோயாளிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் ஐந்து மாதங்களுக்குள் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

எட்டில் ஒருவர் கொரோனா தொடர்பான பிரச்சினைகளால் உயிரிழப்பதாகவும் ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

Leicester பல்கலைக்கழகமும் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கொரோனாவின் முதல் அலையின்போது மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 47,780 பேரில் 29.4 சதவிகிதத்தினர் 140 நாட்களுக்குள் மீண்டும் உடல் நல பிரச்சினைகள் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 12.3 சதவிகிதத்தினர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வு ஆரம்ப கட்ட முடிவுகளின் அடிப்படையிலானது மேலும் இந்த முடிவுகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.