🔴 செவ்ரோன்: முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் சாவடைந்ததாக தகவல்! - உண்மை என்ன..??!
கொரோனா வைரசுக்காக முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் சாவடடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தியோகபூர்வ தகவல்களாக இல்லாமல் இந்த செய்தி வேகமாக பரவி வரும் நிலையில், இது தொடர்பான உண்மை தகவல்களை நாம் அறிந்துகொண்டோம். 93 ஆம் மாவட்டத்தின் செவ்ரோன் நகரில் கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி 'பிரான்சின் முதல் கொரோனா தடுப்பூசி' போடப்பட்டது. 78 வயதுடைய Mauricette எனும் பெண்மணிக்கே இந்த தடுப்பூசி போடப்பட்டது.
இவரே தற்போது சாவடைந்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் அச்செய்திகளில் உண்மை இல்லை எனவும், அவர் இறக்கவில்லை எனவும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பெண்மணிக்கு Pfizer BioNTech எனும் கொரோனா தடுப்பூசியே போடப்பட்டது. அவர் பூரண உடல்நலத்துடன் உள்ளார் என நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments