ஜேர்மனியில் நீடிக்கப்படும் கடுமையான ஊரடங்கு
ஜேர்மனியில் கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி மக்கள் மத்தியில் போடும் பணிகள் தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.
ஜேர்மனியில் தற்போது வரை 19,44,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன், 41,806 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஏப்ரல் மாதம் ஆரம்பம் வரை ஊரடங்கு நீடிக்க வேண்டும் என தனது கன்சர்வேடிவ் எம்.பி-க்களுடனான சந்திப்பில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார்.
இந்த பிரித்தானிய வைரஸை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால், ஈஸ்டர் பண்டிகைக்கு அதாவது ஏப்ரல் மாதம் 10 மடங்கு அதிகமாக தொற்றுகள் ஏற்படும்.
அதனால், இன்னும் எட்டு முதல் 10 வாரங்கள் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று கூட்டத்தில் மெர்க்கல் கூறியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
No comments