Header Ads

கொரோனா மூன்றாம் தொற்றலை - பிரான்சைக் கடுமையாகத் தாக்கும் - இன்று எச்சரிக்கை!!

 


பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனமான Inserm (Institut national de la santé et de la recherche médicale) எச்சரித்துள்ளது.

 
பிரான்சில் மருத்துவமனைகளில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரிப்பதும், பிரித்தானிய வைரசான «VoC 202012/01» இன் தொற்று பிரான்சில் அதிகரிப்பதும் பெரும் ஆபத்தின் அறிகுறி என inserm எச்சரித்துள்ளது.
 
 
பிரித்தானிய வைரசின் அதிகரிப்பு பிரான்சில் மிகமோசமான மூன்றாவது தொற்றலையை உருவாக்க உள்ளதெனவும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
 
உள்ளிருப்பு ஏற்படுத்தப்பட்டு, தொற்றுச் சங்கிலி அறுக்கப்படாவிட்டால், தற்போதுள்ள கொரோனா வைரசை விட, 70 சதவீதம் அதிகத் தொற்றுள்ள பிரித்தானிய வைரசால், இரண்டு மாதங்களிற்குள் வைத்தியசாலைகள் நிரம்பிவிடும் ஆபத்தும், நான்கு மடங்கான நோயாளிகள் உருவாகும் ஆபத்தும், மிக மோசமான விளைவுகளும் ஏற்படும் எனவும், பிரான்சின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் எச்சரித்துள்ளது.
 
இதற்கு பிரித்தானியாவின் இன்றைய மோசமான நிலைமையும், நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாவுகளும் உதாரணம் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
 

No comments

Powered by Blogger.