🔴 விசேட செய்தி : பிரித்தானியாவின் புதிய வைரஸ், இல் து பிரான்சுக்குள் கண்டுபிடிப்பு!!
பிரித்தானியவில் கண்டறியப்பட்ட புதிய வைரஸ் தற்போது இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வீரியம் மிக்க இந்த புதிய வைரஸ் பிரான்சில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது இது இல் து பிரான்சுக்குள் கண்டறியப்பட்டுள்ளதாக, l'Assistance publique – Hôpitaux de Paris நிறுவனம் அறிவித்துள்ளது.
சற்று முன்னர் இதன் இயக்குனர் Martin Hirsch தெரிவிக்கும் போது, <<ஆமாம். புதிய வைரஸ் பரிசின் ஆய்வுகூடத்தில் இந்த புதிய வகை வைரஸ் அடையாணம் காணப்பட்டுள்ளது. நோயாளி பரிசின் மாகாணத்தைச் (இல் து பிரான்ஸ்) சேர்ந்தவர் ஆவார்!>> என தெரிவித்தார்.
பிரான்சில் இந்த புதிய வைரஸ் டிசம்பர் 25 ஆம் திகதி Tours நகரில் முதன் முறையாக கண்டறியபப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments