Header Ads

ஞாயிற்றுக்கிழமை எமானுவல் மக்ரோனின் உரை - உள்ளிருப்பு அறிவிப்பு!!



18h00 மணி முதல் போட்பட்ட ஊரடங்கு உத்தரவு, முதற்கட்டமாக, கக் குறைந்தது 15 நாட்களிற்கு என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி அது ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைகின்றது.
 
இது தொடரப்படுமா, இறுக்கமான உள்ளிருப்பு அறிவிக்கப்படுமா அல்லது வேறு திட்டங்கள் வகுக்கப்படுமா என்பதே தற்போதைய மில்லியன் டொலர் கேள்வியாக உள்ளது.
 
அரசாங்கம் அவசரமான ஒரு முடிவை எடுப்பதற்குத் தள்ளப்பட்டுள்ளது. எமானுவல் மக்ரோன் காலத்தைத் தள்ளிப் போட நினைத்தாலும் வைத்தியசாலைகளின் நிலை அவரிற்கு அந்த அவகாசத்தை வழங்கவில்லை.
 
பிரித்தானிய, தென்னாபிரிக்க வைரஸ்களின் அதிதீவிரப் பரவல் பாரிய ஆபத்து என சுகாதார அமைச்சர் தெரிவித்திருக்க, அரசாங்கம் இறுக்கமான முடிவுகளை அறிவிக்கும் என அரச ஊடகப்பேச்சாளரும் அறிவித்துள்ளார்.
 
அடுத்த வாரம் வரை இழுத்தடிக்கக் கூடிய நிலைநில் அரசாங்கம் இல்லையென்றும், இந்த ஞாயிறு இரவு எமானுவல் மக்ரோன் நிச்சயம் முடிவுகளை அறிவிப்பார் எனவும், ஊடக ஆய்வாளளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
 
ஜனாதிபதி மாளிகையின் அறிவிப்பிற்கு மட்டுமே அனைவரும் காத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.