கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொற்றாளர்களுக்கு நேர்ந்த கதி
இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையங்களில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் தொற்றாளர்களுக்கு காலை உணவை நிராகரித்துள்ளனர்.
தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும் நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள், மனித நுகர்வுக்கு பொருத்தமற்றது என அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர்.
கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் கிடைக்கும் காலை உணவுகளில் புழுக்கள்.
இதனை கூறினால் அதற்கு பொறுப்பேற்க ஒரு அதிகாரிகளும் இல்லை.
குடிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் மிருகங்கள் போன்று நடத்தப்படுவதாக நோயாளிகள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
முறைப்பாடுகளை தொடர்ந்து நேற்று பிற்பகல் சுத்தமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தலைமன்னார், கலேவெல, கம்பஹா, நுவரெலியா, கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த 136 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments