Header Ads

பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து! எச்சரிக்கும் நிபுணர்கள்

 


பிரித்தானியாவில் குழந்தைகளின் மனநலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சையின் வழங்கல் ஏற்கனவே பற்றாக்குறையாகவே இருந்தது.

இப்போது அதற்கு பரிந்துரைகள் 35% உயர்ந்துள்ளன, ஆனால் சிகிச்சைகள் 4% மட்டுமே அதிகரித்து வருகின்றன.

பிரித்தானியாவில் சமீபத்தில் அமுல்படுத்தப்பட்ட 3வது தேசிய பூட்டுதலுக்கு முன்னர், NHS வெளியிட்ட ஒரு ஆய்வின் முடிவில்,

நாட்டில் 6 குழந்தைகளில் ஒருவருக்கு மனநல சுகாதார நிலை இருப்பதைக் கண்டறிந்ததுள்ளதாகக் Anne Longfiel கூறியுள்ளார்.

மேலும் தொற்றுநோயின் விளைவாக மனநலப் பிரச்சினைகளின் அளவு கணிசமாக உயர்ந்திருக்க வாய்ப்புள்ளது என இங்கிலாந்தின் குழந்தைகள் நல ஆணையர் Anne Longfield எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக பூட்டுதல் மற்றும் பள்ளி மூடல்கள் பல குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

2019/20 ஆம் ஆண்டில், 538,564 குழந்தைகள் மனநல உதவிக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

இது முந்தைய ஆண்டை விட 35% அதிகம் என்றும் அதற்கு முந்தைய ஆண்டை

விட கிட்டத்தட்ட 60% அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், முடிந்தவரை குழந்தைகளுக்கான சில மனநல சுகாதார சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கப்பட்டுவருவதாக லாங்ஃபீல்ட் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.