கனடாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்க்கப்பட்ட இளம்பெண்!
கனடாவின் நார்த் பே நகரை சேர்ந்தவர் St. Jean (31) இவர் ரொறன்ரோவில் சில காலமாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வியாழன் அன்று St. Jean படுகாயங்களுடன் உயிருக்கு போராடுவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.
அங்கு பொலிசாரும் அவசர உதவி குழுவினரும் சென்ற நிலையில் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை,
பொலிசார் விசாரணை நடத்தி வந்தில் St. Jean கொலை வழக்கில் Soreeysa Abdi (26) என்ற இளைஞனை கைது செய்துள்ளனர்.
இருவரும் ஒரே அடுக்குமாடி வீட்டில் வசித்து வந்ததும் அவர்களுடன் மற்றொரு பெண் ஒருவர் வசித்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட Soreeysa Abdi மீது ஏற்கனவே போதை மருந்துகள் தொடர்பாக வழக்கு இருப்பதும் அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொலை குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
No comments