இல்-து-பிரான்சில் தொடர்ந்த பனிவீழ்ச்சி!! பாதிக்கப்பட்ட போக்குவரத்து!!
வானிலை மையம் அறிவித்தபடி, பிரான்சின் மேற்குப் பகுதியிலும், பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களிலும் பனி விழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இதனால் போக்குவரத்துக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.
முக்கியமாக நோர்மோந்திப் பகுதியில் போக்குவரத்துக்கள் மோசமாகப் பாதிப்படைந்துள்ளன.
மீண்டும் இன்று இரவு Hauts-de-France இலிருந்து Grand-Est வரையாக பனிவீழ்ச்சி ஏற்பட உள்ளது.
Caen-Rennes இனை இணைக்கும் A84 நெடுஞ்சாலையின் பெரும் பகுதிகள் பனிவீழ்சியினால் ஏற்பட்ட விபத்துகளினால் Saint-Ouen-des-Besaces (Calvados) பகுதி இன்று காலையில் இருந்து மூடப்பட்டிருந்தது.
Normandie> Centre-Val-de-Loire, Mayenne, Sarthe ஆகிய பகுதிகளில் 3cm வரையான பனி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments