Header Ads

வரலாறு காணாத அளவிற்கு வீதி விபத்துச் சாவுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.



வீட்டிலிருந்தே வேலை செய்வது, குறைவடைந்த பொருளாதார நடடிக்கைகள், இடப்பெயர்வுகளிற்கு விதிக்கப்பட்ட கட்டப்பாடுகள் என்பனவற்றின் பயனாக, வரலாறு காணாத அளவிற்கு வீதி விபத்துச் சாவுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
 
கடந்த 60 வருடங்களாக வீதி விபத்துச் சாவுகளின் எண்ணிக்கை 3.000 இற்குக் கீழ இறங்கியதேயில்லை.
 
வீதிப் பாதுகாப்புப் பிரிவினர் இன்று வழங்கிய அறிக்கையில் 2020 ஆம் ஆண்டில் வீதிவிபத்துச் சாவுகளின் எண்ணிக்கை 2.550 ஆக இருந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

2012 ஆம் ஆண்டு நிக்கோலா சாரக்கோசி, வீதி விபத்துச் சாவுகளின் எண்ணிக்கையை 3.000 இற்குக் கீழ் குறைக்க வேண்டும் என்று இலக்கு வைத்திருந்தமை, இச்சமயத்தில் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.