அடுக்கு மாடிக் கட்டடத்தில் மனைவி தூக்கில் - கணவன் கைது - கொலையா ???
Verneuil-sur-Seine (Yvelines) இலுள்ள ஒரு அடுக்கு மாடிக் கட்டடத்தில் போதைப் பொருள் விநியோகத்தினைத் தடுப்பதற்காகக் காவற்துறையினரின் குற்றத் தடுப்புப் படையினர் (BAC) சென்றிருந்தனர்.
மதியமளிவில் இந்தத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வீட்டிற்குள் பெரும் சண்டையும், அலறல் சத்தமும் கேட்டதையடுத்து அங்கு சென்ற காவற்துறையினர், அங்கு உள்ள ஒரு இரும்பு அலமாரியில், போர்வையின் துணைகொண்டு ஒரு பெண் தூக்கில் தொங்கியிருப்பதைக் கண்டுள்ளனர்.
உடனடியாக அசரசர சிகிச்சைப் பிரிவினர் வந்தும் எந்தப் பலனுமின்றி, அந்தப் பெண் சாவடைந்திருந்தார். இவரின் உடலம் Garches வைத்தியசாலைக்கு உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
காவற்துறையினர் உள்நுழைந்த சமயம், கையில் காயத்துடன் இந்தப் பெண்ணின் கணவன் நின்றிருந்துள்ளார். தான் தூக்கில் தொங்கிய மனைவியைக் காப்பாற்ற முயன்றபோதோ காயப்பட்டதாகத் தெரிவித்திருந்துள்ளார். ஆனால் அங்கு எந்தக் காப்பாற்றல் முயற்சியும் நடந்திருக்கவில்லை. உடனடியாகக் காவற்துறையினர் இவரைக் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே பல குற்றங்களிற்ககாகவும், மனவி மீதான வன்முறைக்காகவும் இவர் விசாரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண இவரால் ஏற்கனவே வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்துள்ளார். இது கொலையா? தற்கொலையா? என்ற விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.
No comments