பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை ! மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை
பிரித்தானியாவில் பிரெக்சிட் பிரச்சினைகளால், காய்கறிகள் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், புதன்கிழமை முதல் மேலும் பிரச்சினை அதிகரிக்கும் என வெளியாகியுள்ளது.
சாலட் செய்ய பயன்படுத்தப்படும் லெட்டூஸ் வகை இலைகள், காலிபிளவர், ஆரஞ்சுகள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி, கேரட், பிரக்கோலி ஆகியவை சில பல்பொருள் அங்காடிகளில் தீர்ந்துபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெக்சிட்டுக்குப் பிந்தைய மாற்றங்களால் ஆவணங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், பொருட்கள் மற்ற நாடுகளிலிருந்து வருவதை தாமதமாகியுள்ளது.
இதனால் மீண்டும் டோவர் துறைமுகத்தில் ட்ரக்குகள் தேங்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலை இன்று முதல் மேலும் தீவிரமடையும் என உணவுத்துறை நிபுணர்களும், பிரெக்சிட்டுக்குப் பொறுப்பான அமைச்சரான Michael Goveம் எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் தொடங்கிவிட்ட நிலையில், பிரான்ஸ் உடனான போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்று முதல் தீவிரமாவதால் இன்னும் பிரச்சினை அதிகமாகும் என சாலைப் போக்குவரத்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிரெக்சிட் மட்டுமின்றி, காய்கறிப் பண்ணைகளில் பணிபுரிவோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது மற்றும் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தபடுவதும் உணவுத்துறையை பாதித்துள்ளது.
இதன் காரணமாக மேலும் எதிர்வரும் காலங்களில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
No comments