பரிசில் நீர்மட்டம் அதிகரிக்கும் செய்ன் நதி - வெள்ள ஆபத்து!!
பரிசில் தொடர்ச்சியாகப் பெய்த மழையினால் வெள்ள ஆபத்து ஏற்பட்டுள்ளது. பரிசில் செய்ன் நதியில் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து மஞ்சள் எச்சரிக்கை நிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ஆறு மற்றும் நதிகளின் வெள்ள ஆபத்து எச்சரிக்கை நிறுவனமான Vigicrues இனால் விடுக்கப்பட்டுள்ளது.
இல்-து-பிரான்சின் மார்ன் (marne) பகுதியின் செய்ன் தடுப்பணைப் பகுதி முற்றாக நிரம்பி உள்ளது. தொடர்ச்சியான மழைபெய்தால் மற:றைய பகுதிகளும் நிரம்பி வழியும் எனவும் இந்த எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை இரவு வரை செய்ன் நதியின் நீர்மட்டம் 2.36 மீற்றராக இருந்தது. சனிக்கிழமையான இன்று இது 3.05 மிற்றராக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமைக்குள் இது 4.50 மீற்றர்களைத் தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் பரிசின் செய்ன் ஆற்றங்கரையில் நீர் தழும்பும் நிலை ஏறபட்டுள்ளதால், ஆற்றங்கரைப் பாதைகளில் போக்குவரத்தக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆற்றுப் போக்குவரத்துக்களும் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
No comments