🔴 பரிசில் பனிப்பொழிவு! - காவல்துறையினர் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!
இல் து பிரான்சுக்குள் கடும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், மிக அத்தியாவசியமான பயணங்களை மாத்திரம் மேற்கொள்ள காவல்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை மாலை முதல் தலைநகரம் பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் மாகாணம் முதல் கடும் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. <<வீதிகளில் பயணிக்கும் போது அவதானமாக பணிக்கவும், முடிந்தவரை பொது போக்குவரத்துக்களை பயன்படுத்தவும்!>> என காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று இரவு -3° வரை கடுமையான குளிர் நிலவும் எனவும், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 3 செ.மீ பனிப்பொழிவு பதிவாகும் எனவும் Météo France அறிவித்துள்ளது.

No comments