நாம் உள்ளிருப்பை நோக்கிச் செல்வதே இதற்குச் சிறந்த வழி -அவசரசிகிச்சைப் பிரிவின் தலைவர் பிலிப் ஜுவன்
«ஜனவரி மாத இறுதிக்குள் ஒரு மில்லியன் பேரிற்குக் கொரொனத் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு விடும் என சுகாதார அமைச்ர தெரவித்திருந்தார்.
ஆனால் பெப்ரவரி இறுதியில் தான் ஒரு மில்லியன் பேரிற்கு ஊசிகள் போடப்பட்டாலும், அது ஒரு மில்லியன் என்ற கணக்கு இல்லை. இங்கு ஒரு மில்லியன் பேரிற்கு முதற்கட்ட ஊசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. வெறும் 40.000 பேரிற்கு மட்டுமே இரண்டாம் கட்ட ஊசிகள் போடப்பட்டுள்ளன. இது முழுமையானது இல்லை»
என பரிசின் பெரிய மருத்துவமனையான Hôpital européen Georges-Pompidou வின் அவசரசிகிச்சைப் பிரிவின் தலைவர் பிலிப் ஜுவன் (Philippe Juvin) தெரிவித்துள்ளார்.
«பரிசில் அதிகரிக்கும் நோயாளிகளினால் நாம் உள்ளிருப்பை நோக்கிச் செல்வதே இதற்குச் சிறந்த வழி. அது கட்டாயம் » எனவும், இவர் தெரிவித்துள்ளார்.
No comments