400 மாணவர்களிற்கு கொரோனத் தொற்று
ஜனவரி நடுப்பகுதியில் இருந்து, பாடசாலைகள், கொலேஜ்கள், லிசேக்கள் என கொரோனத் தொற்று பெரிதும் தாக்கத் தொடங்கி உள்ளது. அரசாங்கத்தின் அறிவிப்பின் படி 3 பேரிற்கு அதிகமான தொற்று இருப்பின் அங்கு அனைவரிற்கும் கொரோனாப் பரிசோதனை செய்யப்படல் வேண்டும் என்பது கல்வியமைச்சிற்கான ஆணை!
ஆனால் இந்தக் கொரொனாப் பரிசோதனை, ஆசிரியர்களிற்கும் பணியாளர்களிற்கும் அவர்களின் ஒப்புதலின் பேரிலும், மாணவர்களிற்கு அவர்களின் பெற்றோர்களின் ஒப்புதலின் பேரிலும் மட்டுமே பரிசோதனை செய்யப்படும்.
துலாசிலுள்ள Hubertine Auclert கொலேஜினை, கொரோனத் தொற்று மிகப் பலமாகத் தாக்கி உள்ளது.
820 மாணவர்களும், 130 ஆசிரியர்களும் பணியாளர்களும் உள்ள, இந்தக் கொலேஜில் கடந்த வாரம் பெரும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் வெள்ளிக்கிழமையும் எதிர்வரும் திங்கட்கிழமையும் 400 மாணவர்களிற்குக் கொரோனாப் பரிசோதனை நடாத்தப்படுகின்றது.
மிகுதி 400 மாணவர்களும் தாங்களாகவே ஆய்வு கூடங்களில் கொரோனாப் பரிசோதனை செய்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments