Header Ads

கொரோனா தடுப்பூசி போடுவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 


கொரோனா தடுப்பூசி போடுவதில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

 
இதுவரை ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதும், அரசு அறிவித்த 2.5 மில்லியன் எனும் இலக்கை நெருங்குவதில் பலத்த சிக்கல் எழுந்துள்ளது. தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், பல சிகிச்சை மையங்கள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. பல நிலையங்கள் போதிய சேவைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. 
 
இந்நிலையில், நேற்றைய நாளில் வெறும் 18,151 பேருக்கு மாத்திரமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சனிக்கிழமை 50.000 பேருக்கு அதிகமானோருக்கும், அதற்கு முன்னதாக 100.000 பேருக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
 
எவ்வாறாயினும், இதுவரை 1,026,871 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 
 
ஜனவரி மாத இறுதிக்குள் பாரிய எண்ணிக்கையான தடுப்பூசிகள் பிரான்சை வந்தடைய உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.