இலங்கையில் அரங்கேறி்ய கொடூரம்! மனைவியின் கழுத்தறுத்து கொலை செய்த கணவன்
இலங்கையில் கினிகத்தேன காவல்துறை பிரிவிட்குட்பட்ட செல்லிபிகம பிரதேசத்தில் வசித்த இரு பிள்ளைகளின் தாய் ஒருவரை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 27ம் திகதி மதியம் கணவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் தீவிரமடைந்துள்ளது.
கணவர் கூர்மையான ஆயுதத்தினால் மனைவியின் கழுத்தில் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சந்தேக நபர் அவரின் சகோதரர் மூலம் நேற்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட மனைவியின் சடலத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகின்றது.
No comments