Header Ads

என்றும் இல்லாதவாறு பாரிஸில் குற்றச் செயல்கள் குறைந்த ஆண்டாக !!2020 !!- பரிஸ் காவற்துறை அதிரடி அறிவிப்பு!!

 


பரிசிலும் அதன் அண்மித்த புறநகரப் பகுதிகளிலும், குறிப்பிடப்படும் அளவிற்கு, 2020 ஆம் ஆண்டில் குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக, பரிசின் காவற்துறைத் தலைமை ஆணையம் (préfecture de police de Paris) தனது 28ம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 பொருட்களின் களவுகள், சேதங்கள் 20.8 சதவீதமும், பொருளாதார நிதிமோசடிக் குற்றங்கள் 12.6 சதவீதமும், தனிநபர்கள் மீதான தாக்குதல் குற்றங்கள் 8.8 சதவீதமும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முக்கியமாகParis (75), Hauts-de-Seine (92), Seine-Saint-Denis (93) Val-de-Marne (94) ஆகியவற்றில் 17 சதவீதம் வன்முறையுடன் கூடிய கொள்ளைகளும், 10 சதவீதம் வீடுகளில் நடக்கும் திருட்டுக்களும் குறைவடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
 
பரிசில் மட்டும், கொலைகள் 36.5 சதவீதமும், பொருட்களின் திருட்டு 26.8 சதவீதமும், தனி நபர்கள் மீதான தாக்குதல்கள் 15.58 சதவீதமும், நிதி மற்றும் பொருளாதாரக் குற்றங்கள் 18.3 சதவீதமும் வீழ்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனாவின் தாக்குதல் மற்றும் தொடர்ச்சியான காவற்துறையினரின் சோதனைகள் குற்றச் செயல்களின் வீழ்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவிக்க்பபட்டுள்ளது.

No comments

Powered by Blogger.