இலங்கையில் கொவிட் சிகிச்சை நிலையத்திலிருந்து பரீட்சை எழுதும் பல்கலைக்கழக மாணவர்கள்
இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற 4 மாணவர்கள் கொவிட் – 19 தொற்றுக்கு உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது அவர்கள் பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலை கொவிட் – 19 இடைநிலைப் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வைத்தியசாலையில் இருந்த வண்ணமே தற்போது அவர்கள் பரீட்சையை எழுதி வருகின்றார்கள்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் இறுதி வருட இரண்டாம் தவணைப் பரீட்சையையே அவர்கள் இவ்வாறு எழுதி வருகின்றார்கள்.
மேற்படி மாணவரகள், பல்கலைக்கழகத்தின் உப வேந்தரின் அனுமதியுடன், துணிந்து செயற்பட்டு, சகல வைத்திய நெறிமுறைகளையும், பின்பற்றி, பெரியகல்லாறு பிரதேச வைத்தியசாலையில் இருந்த வண்ணமே பரீட்சைக்குரிய மண்டப ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு பரீட்சை எழுதிவருகின்றார்கள் என கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.கெனடி தெரிவித்துள்ளார்.
மேலும், ஒரே நேரத்திலும் கிழக்குப் பல்கலைக்கழத்திலும், பெரியகல்லாறு வைத்தியசாலையிலும் எமது மாணவர்கள் பரீட்சையை எழுதி வருகின்றனர்.
எமது இந்த செயற்பாட்டைப் போன்று, ஏனைய பல்கலைக்கழகங்களும் பின்பற்றினால் நன்றாக அமையும் என்றார்.
அத்தோடு, இது பல்கலைக்கழக வராலாற்றிலே இலங்கையில் முதல் தடவை நடைபெறுவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி கே.கெனடி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments