Header Ads

மதபோதகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள்! 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை



துருக்கி நாட்டவரான மத போதகர் அட்னான் அக்தார் சொந்தமான ஏ9 என்ற ஆன்லைன் தொலைக்காட்சி சேனலில் பிரசங்கம் நடத்தி வந்துள்ளார்.

அட்னான் அக்தாரின் பிரசங்கத்திற்கு அந்த நாட்டின் மத தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அவரை சுற்றி பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மேற்கொண்ட பல பெண்கள் அந்த நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தனர்.

மேலும் அவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அட்னான் அக்தாரும், அவருடன் தொடர்பில் இருந்த பெண்கள் உட்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு துருக்கி நீதிமன்றத்தில் கடந்த 2 வருடங்களாக நடைப்பெற்று வந்தது.

இந்த நிலையில், அவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்கள் சிலருக்கு கருத்தடை மாத்திரைகள் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டதாக அக்தார் மீது பெண் ஒருவர் குற்றம்சாட்டினார்.

அக்தார் வீட்டில் சோதனையிட்ட பொலிஸார் 69,000 கருத்தடை மாத்திரைகள் கண்டுப்பிடித்தனர்.

இந்நிலையில், அட்னான் அக்தார் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் ராணுவ தகவலை உளவு பார்ப்பது போன்ற பிரிவுகளின் அடிப்படையில் துருக்கி நீதிமன்றம அக்தாருக்கு 1075 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.