கொரோனா தடுப்பூசி பெற்ற பெண் திடீர் மரணம்! காரணம் என்ன…?
போர்ச்சுக்கீஸ் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த Sonia Acevedo (41) என்ற பெண்ணுக்கு, கடந்த டிசம்பர் 30ஆம் திகதி பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி இடப்பட்டது
இரண்டு நாட்களுக்கு பின் அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
அவருக்கு இரண்டு குழந்தைக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவருக்கு வேறு உடல் நல பிரச்சினைகளும் இல்லை எனவும் தடுப்பூசி போட்டுக்கொண்டபோது அறிகுறிகள் எதுவும் தோன்றவும் இல்லை.
இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்துள்ளதால் அவரது தந்தையான Abilio Acevedo கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
Abilio தெரிவிக்கையில் மகளின் மரணத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவேண்டும் என மிக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
Abilio புத்தாண்டுக்கு முந்தைய தினம் சேர்ந்து உணவருந்தியபின் வீட்டை விட்டு வெளியே என் மகளை நான் மீண்டும் உயிருடன் பார்க்கவில்லை என கண்ணீர் விடுகிறார்
புத்தாண்டு தினத்தன்று காலை 11 மணியளவில் மகள் இறந்துகிடந்ததாக Abilioவுக்கு தொலைபேசியில் தகவல் தெரியவந்துள்ளது.
Soniaவின் திடீர் மரணத்துக்கான காரணம் தெரியாத நிலையில், அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
No comments