பிரித்தானியாவில் மீண்டும் புதிய உச்சம் தொட்ட கொரோனா
பிரித்தானியாவில் கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,610 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,355 என தெரிய வந்துள்ளது.
இதனால் பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,466,849 என உத்தியோகப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், கொரோனாவால் மொத்த மரண எண்ணிக்கை மட்டும் 91,470 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரத்திற்கு முன்னர், ஜனவரி 5 அன்று பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட, தற்போது சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு சரிந்த போதிலும் எதிர் வரும் காலங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments