ஜேர்மனியிலும் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ்! 35 பேர் பாதிப்பு
பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் புதுவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜேர்மனியிலும் ஒரு புதுவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஜேர்மனியிலுள்ள Garmisch-Partenkirchen என்னும் பவேரிய நகரமொன்றில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில், 73 நோயாளிகளுக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
அவர்களில் 35 பேருக்கு தொற்றியுள்ளது ஒரு புதுவகை கொரோனா வைரஸ் என தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் அது அந்த கொரோனா வைரஸ்களைப்போல எளிதில் பரவக்கூடியதா அல்லது பயங்கரமாக கொல்லக்கூடியதா என்பது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
அதைக் கண்டு பிடிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments