கட்டுப்பாட்டை மீறி இரகசிய விருந்து! - 7 பேர் கைது..!!
ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி இரகசிய விருந்து கொண்டாடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Les Mureaux (Yvelines) நகரில் இந்த விருந்து நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இங்குள்ள shisha bar எனும் பிரபல மதுச்சாலையில் இந்த விருந்து இடம்பெற்றுள்ளது. இதில் 50 பேர் வரை கலந்துகொண்ட நிலையில், விருந்தின் இடையில் காவல்துறையினர் உள் நுழைந்து, விருந்தை தடுத்து நிறுத்தினர்.
அவர்களில் பலர் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காமல் இருந்துள்ளனர். அவர்களில் பலருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டது. அத்தோடு 19 தொடக்கம் 23 வயதுக்குட்பட்ட 7 பேர் காவல்துறையினரால் கைதும் செய்யப்பட்டனர்.
இரவு நேரத்தில் இது போன்ற விருந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.
No comments