Header Ads

நோர்வே நாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியாகிய 7 பேர்

 


தெற்கு நோர்வேயில் கடந்த வாரம் வீடுகளை அழித்த பாரிய நிலச்சரிவுக்குப் பின்னர் காணாமல் போனவர்களுக்கான தேடலில், ஏழு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நான்கு சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

உயிரிழந்தவர்களில் 5பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதில் 40 வயது நபர் மற்றும் அவரது இரண்டு வயது மகள் உள்ளனர், மேலும் 10பேர் காயமடைந்தனர்.

நிலச்சரிவு நடந்த இடத்தை நோர்வே மன்னரும் ராணியும் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டனர்.

தென்கிழக்கு நோர்வேயில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியின் நிர்வாக மையமான அஸ்க் நகரில் கடந்த புதன்கிழமை பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில், 10பேர் காயமடைந்ததோடு 21பேர் மாயமாகியுள்ளனர்.

மேலும், நிலச்சரிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சுமார் 700பேர் இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜெஜெர்ட்ரம் நகராட்சியில் ஒரு குடியிருப்பு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

No comments

Powered by Blogger.